ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் காங்கிரஸினல் ரிசர்ச் சர்வீஸ் என்ற அமைப்பு தயாரித்துள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக சீர்திருத்தங்களை அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்புத்துறையில் நேரடி அன்னிய முதலீடு குறித்து அந்நாடு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.