இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா பேசும்போது, இங்கிலாந்தில் இருந்து கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் கண்ணூர் பகுதிகளுக்கு வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக் கூறிய அவர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய சிகிச்சைக்குப் பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.