உலகின் தென் துருவமான அண்டார்டிகாவில் இந்திய விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்திய குழு இதற்கு முன்பு 39 முறை அங்கு சென்று ஆய்வு நடத்தி திரும்பி உள்ளது. அங்குள்ள பாரதி மற்றும் மைத்ரி நிலையங்களில் தங்கி ஆய்வு மேற்கொள்ள 43 பேர் கொண்ட குழு கோவாவின் மர்மகோவா துறைமுகத்தில் இருந்து 5 ஆம் தேதி புறப்படுமென தேசிய துருவ மற்றும் கடல் ஆய்வு மையத் தலைவர் ஜேவித் பெக் தெரிவித்துள்ளார்.
பருவ நிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளில் இந்த குழு ஈடுபடும் என்றும், குழுவினர் செல்லும் கப்பலுக்கான எரிபொருளை முதல் முறையாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்க உள்ளது என்றும் அவர் கூறினார்.
கோவாவில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு செல்லும் கப்பல் பின்னர் அங்கிருந்து 16 நாட்கள் பயணத்தில் தென்துருவத்தை அடையுமென அவர் தெரிவித்தார்.