போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் வருகிற 8 ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், நரேஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கலாம் என அமைச்சர்கள் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
இதனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றும், அடுத்த கட்டமாக வருகிற 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.