வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதில் இருந்து 55 லட்சம் ரூபாய் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா கணக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக அவருக்கு 3 முறை சம்மன் அனுப்பிய போதும், உடல்நிலையைக் காரணம் காட்டி ஆஜராகமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஆஜரான வர்ஷாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.