புதுச்சேரியில் சுமார் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகை பதிவேடு கிடையாது. மாணவர்கள், தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தோடு வரவும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். 18-ம் தேதிக்கு பிறகு முழு நேரமாக செயல்படும். வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, தனிநபர் இடைவெளியுடன் மாணவர்களை அமர வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
லபர்தி வீதியிலுள்ள அரசு பள்ளி நுழைவுவாயிலில் வாழைமரம், பலூன்கள் கட்டி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.