தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்காக டெல்லி ஆம் ஆத்மி அரசு தமிழ் அகாடமியை அமைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரம் கொண்டுள்ள டெல்லிக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவதாகக் குறிப்பிட்டார்.
டெல்லி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரான என்.ராஜா அகாடமியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழுக்கு விருதுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழ் மொழி கற்பித்தல் போன்ற பணிகளை இந்த தமிழ் அகாடமி மேற்கொள்ள உள்ளது.