காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் 5 அங்குலத்திற்கும், குல்மார்க் மற்றும் பாஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று முதல் 2 அடி உயரத்திற்கும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரின் 3 தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓடுதளத்தில் பனி நிறைந்திருப்பதாலும், சரியான பார்வை இல்லாததாலும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடரும் பனிப் பொழிவால் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.