இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளைவித்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில், 10 ஏக்கருக்கு ஸ்ட்ராபெரி, தக்காளி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விளைவித்து வருகிறார். இதனை ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்துள்ளார். விளைச்சலைப் பொருத்து, அதனை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் உர விற்பனையை அவர் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.