திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வழங்கப்பட உள்ளன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் சொர்க்க வாசல் நிகழ்ச்சி ஞாயிறுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, திங்கள் முதல் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட்கள், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வைத்து வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தரிசனத்துக்கு ஒருநாள் முன்பாக, ஆதார் அட்டையை காண்பித்து, பக்தர்கள் இலவச டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.