இந்திய பொருட்கள் உலக தரம் வாய்ந்தவையாக மாற மாணவர்கள் பாடுபட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இந்திய நிர்வாகவியல் மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பின் பேசிய அவர், தாம் பிரதமராக பொறுப்பேற்ற போது நாட்டில் 13 மத்திய நிர்வாகவியல் கல்லூரிகளே இருந்தன என்றார்.
இப்போது 20 கல்லூரிகள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இங்கு படிக்கும் மாணவர் பட்டாளம், தன்னிறைவு பெற்ற தாயகத்தை உருவாக்க பாடுபட வேண்டுமென்றார்.
வேளாண்மை முதல் விண்வெளி வரை செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் பெருகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதியன படைப்பது,நேர்மையுடன் பாடுபடுவது, ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவையே நிர்வாகத்தின் புதிய தாரக மந்திரங்கள் என்று அவர் கூறினார்.