ஒடிசாவில் போலியான ஜிஎஸ்டி பில்கள் தயாரித்து 510 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பலின் தலைவன் சந்தீப் மோகன்ட்டியை கட்டாக்கில் வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
குற்றவாளி தமது குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாக ஒடிசா மத்திய வரிகள் மற்றும் ஜிஎஸ்டி ஆணையர் எஸ்.கே.லோஹானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
22 போலி நிறுவனங்களை நடத்தியது போன்று போலியான பில்கள் தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அளவில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தியபின்னர் இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இதன் மூளையாக செயல்பட்ட நபரும் நேற்று கைது செய்யப்பட்டார்.