வெளிநாட்டுக்கு அமெரிக்க டாலர்கள் கடத்திய விவகாரத்தில் கேரள சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகாத் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட முக்கிய நபர்களான சொப்னா மற்றும் சரித்குமாரிடம் சுங்க இலாகா விசாரணை நடத்தியது.
அப்போது, வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய இவர்கள், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அமெரிக்க டாலர்கள் கடத்தியதும் தெரிய வந்தது. வளைகுடா நாடுகளில் தொழில் நடத்தி வரும், கேரளாவில் உள்ள சில முக்கிய நபர்களுக்காக டாலர்களை கடத்தியதாக இவர்கள் கூறினர்.
இது தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த சில தினங்களில் சுங்கத்துறை நோட்டீஸ் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.