உருமாறிய கொரோனா வைரசின் உற்பத்தி பெருக்கம் மிகவும் வேகமானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சி நடத்திய லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அக்சல் கேண்டி, முந்தைய மற்றும் தற்போதைய வைரஸ்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மிகவும் தீவிரமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய கோவிட் 19 வைரஸ் வளரிளம் பருவத்தினர் இடையே அதிகமாகக் காணப்பட்டதாக கூறிய கேண்டி, புதிய உருமாறிய வைரஸ் அனைத்து தரப்பினரிடையும் பரவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய வைரஸ் அனைத்து வயதினரிடையே தொற்று நோயை அதிகரிப்பதாகவும் பேராசிரியர் கேண்டி கூறியுள்ளார்.