பஞ்சாப்பில் விவசாயிகள் சிலர் பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு முன் வைக்கோல் மற்றும் சாணத்தை குவித்து வைத்து விட்டுச் சென்றனர்.
ஹோஷியார்பூர் என்ற இடத்தில் முன்னாள் அமைச்சர் திக்சன் சுத் என்பவர் வீடு அமைந்துள்ளது. இங்கு வந்த சிலர் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டபடி அவர் வீட்டு முன் வைக்கோல் மற்றும் சாணத்தை குவித்து வைத்துவிட்டுச் சென்றனர். தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.