சீனக் கடல் எல்லையில் கரை சேர அனுமதி மறுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த 39 கப்பல் மாலுமிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
2 சரக்குக் கப்பல்கள், சீனாவின் ஜிங்டாங், காபீடியான் துறைமுகங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படாமல் பல மாதங்களாக தவித்து வருகின்றன. கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள அந்தக் கப்பல்களில் 39 இந்திய மாலுமிகள் உள்ளனர்.
இதுதொடர்பாக பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அதிகாரிகளை தொடர்புகொண்டு, 2 கப்பல்களும் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.