கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குணமடைந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் தன்னைத் தானே தனிமைபடுத்தி கொண்டிருந்தார். இந்நிலையில் , கொரோனாவிலிருந்து தாம் முழுவதும் குணமடைந்து விட்டதாக அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனாவிலிருந்து குணமாக வேண்டி பிரார்த்தனை நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.