கர்நாடக உள்துறைச் செயலாளர் ரூபா, கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுப் பெங்களூர்ச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவை மற்ற கைதிகள் போல் நடத்தாமல், அவருக்குச் சலுகைகள் வழங்கப்பட்டதாக அப்போது சிறைத்துறையில் இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.
அதன்பிறகு பல பதவிகளுக்கு மாற்றப்பட்ட ரூபா, காவல்துறைத் தலைமை இயக்குநராகவும், உள்துறைச் செயலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கர்நாடக அரசு அவரைக் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் பதவிக்கு மாற்றியுள்ளது.