கடந்த 2020ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் பொதுமக்கள் ,பாதுகாப்புப் படையினர் உள்பட யார் மீதும் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தீவிரவாதிகளின் பதுங்கும் இடங்களில் அதிரடி சோதனை நடத்தி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் 90 இடங்களில் தீவிரவாதிகளுடன் சண்டை நடத்தியதாகவும் ஜம்முவில் 13 இடங்களில் சண்டை நடத்தி வெற்றிகரமாக தீவிரவாதிகளை அழித்துவிட்டதாகவும் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.பாதுகாப்பு படையினர் 44 பேரும் இந்த துப்பாக்கிச் சண்டைகளின் போது தங்கள் உயிரை இழந்துள்ளனர்.