பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 25 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.
இதில் நேற்று நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது.