சில நாட்களில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேக்கா உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது மிகவும் நல்ல செய்தி, முக்கியமான முன்னேற்றம் என அவர் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்கிறது என்பதற்கான வலுவான விவரங்கள் அஸ்ட்ராஜெனேக்கா நிறுவனத்திடம் உள்ளது என்றும், அதே தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் சீரம் நிறுவனம் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதையும் ரண்தீப் குலேரியா சுட்டிக்காட்டியுள்ளார்.
பைசர் தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேடில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், அதோடு ஒப்பிடும்போது ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி சென்டிகிரேடில் இந்த பாதுகாத்து வைக்கலாம் என்பதால், சேமிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் எளிது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.