மூன்று முக்கிய நகரங்களின் உள்கட்டுமானத் திட்டங்களுக்காக 7 ஆயிரத்து 725 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு ஒப்புதல்அளித்துள்ளது.
மூன்று தொழில் நகரங்களை போக்குவரத்து இணைப்புக்கு கொண்டு வரவும் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபட்டினம் தொழில் நகரம், கர்நாடகாவின் தும்குரு தொழில் பகுதியையும் உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவையும் இணைத்து செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.