நாட்டின் வடமாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகரித்துள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிருவில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்துள்ளது.
அந்த மாநிலத்தின் சிகாரில் 3 டிகிரி செல்சியசாகவும், உதயப்பூரில் 3.6 டிகிரி செல்சியசாகவும் குளிர் நிலவுகிறது. இதே போன்று இமாச்சல பிரதேசத்தில் ஒன்று முதல் 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மைனஸ் 7.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் நிலவுகிறது. இதே போன்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.