அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் பேசிய அவர், “முந்தைய காலங்களில் இருந்த திட்டத்தைப் பின்பற்றி கடந்த 2 வருடங்களாக ஆண்டுக்கு 1,100 கோடி ரூபாய் மட்டுமே போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்குச் செலவிடப்பட்டது என்றார்.
இதனால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டு, உதவித்தொகையை அளிக்க முடியாமல்ல் தலித் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்ததாக அவர் கூறினார்.
இதனை மத்திய அரசு மாற்றி, உதவித்தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.