விவசாயிகளுடனான பேச்சில் தீர்வு எட்டப்பட்டுப் போராட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த உள்ளது.
இந்தப் பேச்சில் தீர்வு கிடைக்கும் எனத் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசே அஞ்சும் வகையில் ஒரு நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் தாங்கள் போராட்டம் நடத்த வேண்டியது இருக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இன்றைய பேச்சில் தீர்வு எட்டுவதன்மூலம் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட அனைத்தையும் பற்றிப் பேச அரசு திறந்த மனத்துடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்