நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி இருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் பாபுர் - நியூ குர்ஜா இடையே 351 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சரக்குப் போக்குவரத்து வழித்தடத்தில் முதல் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2006 ஆம் ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தை முந்தைய அரசு கிடப்பில் போட்டு விட்டதாக காங்கிரசை சாடினார்.
சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுவதன் மூலம் செலவைக் குறைப்பதுடன், பயணிகள் ரயில்களையும் கால தாமதம் இன்றி இயக்க முடியும் என்று தெரிவித்தார்.