பிரிட்டனில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த நாட்டில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தடை நீட்டிப்பு குறுகிய காலத்திற்கே அமல்படுத்தப்படும் என்றார்.
கோழிக்கோடு விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரப்பில் 4 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹர்தீப்சிங் புரி கூறினார்.