செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் மர்ம மரணம் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Dec 29, 2020 11:06:37 AM

ர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் எஸ்.எல். தர்மே கௌடா சிக்மங்களூரு அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்ட மேலவையில் துணை சபாநாயகராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தர்மே கவுடா இருந்து வந்தார் .மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகௌடாவுக்கு இவர் நெருக்கமானவராவார். நேற்று மாலை ஆறு மணியளவில் தனது வீட்டிலிருந்து டிரைவருடன் காரில் புறப்பட்டுள்ளார். ரயில் பாதை அருகே வண்டியை நிறுத்தச் சொன்னவர், டிரைவரிடம் ஜான் சதாப்தி ரயில் வரும் நேரம் குறித்துக் கேட்டு தெரிந்துகொண்டர். பிறகு, ‘நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவேண்டும்’ என்று கூறி டிரைவரை மட்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அதற்குப் பிறகு அவரது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் ஆகி விட்டது. 

இரவு வெகு நேரம் ஆகியும் தர்மேகவுடா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.  போலீஸார் அவரை தேடிய போது, கடூர் அருகே மங்கனஹள்ளி ரயில் பாதையில் இரவு ரயில் தண்டாவளத்தில் தலை துண்டான நிலையில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

 தர்மே கௌடாவின் சடலத்துடன் ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட அவரின் உடல் சிக்கமங்களூரு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தர்மே கௌடாவின் தற்கொலைக்குத் தீவிர மன அழுத்தமே காரணம் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் 15 - ம் தேதி சட்ட மேலவையில் பசுவதை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் மசோதாவை நிறைவேற்ற மறுத்துவிட்டார். அதனால், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த தர்மே கௌடா மசோதாவை நிறைவேற்ற முயன்றார். ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தர்மே கௌடாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், தர்மே கௌடா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவர முயற்சி நடைபெற்றது.

இந்த சம்பவத்துக்கு பிறகுதர்மே கௌடா தீவிர மன உளைச்சலில் விரக்தியுடன் இருந்துள்ளார். தர்மே கௌடாவின் மரணம் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு இழப்பாகவே கருதப்படுகிறது.

மத சார்பற்ற ஜனதா தலைவர் கட்சியின் மூத்த தலைவர் தேவேகவுடா, "மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் தர்மே கௌடா தற்கொலை அதிர்ச்சியை தருகிறது. அவர் ஒரு அமைதியான மற்றும் ஒழுக்கமான மனிதர். கர்நாடக மாநிலத்துக்கும் இது பேரிழப்பு" என்று வேதனை தெரிவித்துள்ளார். 

கர்நாடகா முன்னாள் முதல்வர் எ.டி.குமாரசாமி, “எங்கள் கட்சி அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவரை இழந்துள்ளது. தர்மே கௌடாவின் குடும்பத்துக்கும் அவரது அரசியல் ஆதரவாளர்களுக்கும் இறைவன் கருணை காட்டட்டும்” என்று கூறியுள்ளார்.

 


Advertisement
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement