சில மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் பொதுத் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
டெல்லியில் பேசிய அவர், மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதித் தேர்வு நடத்த தேசிய அரசு பணியமர்த்தல் முகமை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த முகமை மூலமாக அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் சிஇடி தேர்வு நடத்தப்படும் என்று கூறிய அவர், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.