இந்தியாவிலேயே மார்பக புற்று நோய் சென்னையில் தான் அதிகம் என அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும், தமிழக சுகாதாரத் துறையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் வி. சாந்தா முன்னிலையில் ஆய்வறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இந்தியாவிலேயே மார்பக புற்று நோய் சென்னையில் தான் அதிகம் என இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஆண்களை பொறுத்தவரை வயிறு, வாய், நுரையீரல் புற்றுநோய்களும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பபை வாய் புற்றுநோய் முக்கியமானதாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.