நாட்டுக்கு தேவை வேலை கொடுப்பவர்களே தவிர வேலை தேடுபவர்கள் இல்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மை மையத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், ஆண்டு தோறும் பட்டதாரிகளை கல்லூரிகள் உருவாக்கி வருகின்றன.
ஆனால் வேலை அளிக்க கூடியவர்களை உருவாக்கவில்லை என்றார். நமது கல்விமுறையே வேலை வாய்ப்பை நோக்கியதாக உள்ளது என்ற அவர், வேலை தேடும் இளைஞர்களை உருவாக்காமல், வேலை அளிப்போரை உருவாக்க வேண்டும் என்றார்.