கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.
கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரத்தை உள்ளடக்கி, ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
திருவனந்தபுரத்தில், ஒரு வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரனை, மேயர் பதவிக்கு அக்கட்சித் தலைமை நிறுத்தியது.
100 உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாமன்றத்தில் 54 வாக்குகளை பெற்று, ஆர்யா ராஜேந்திரன் முறைப்படி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் மேயராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெயரைப் ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார்.