டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜாக்கிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு 4 நாள் பயணமாக அவர் சென்றுள்ளார். நேற்று காலை அவர், கோக்லா கடற்கரைக்கு சென்று சூரியோதய நேரத்தில் ஜாக்கிங் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை பகிர்ந்துள்ளது.
வீடியோ பதிவின்கீழ், மக்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்திய ஆண்டு முடிந்து 2021ல் நாம் அனைவரும் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும், இத்தருணத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உடலை பராமரித்து ஆரோக்கியமாக இருக்க உறுதியேற்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.