இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிரால் உறைபனி பொழிவதால் தரை முழுவதும் பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இமயமலைப் பகுதிகளில் உறைநிலைக்கும் கீழாகக் கடுங்குளிர் நிலவுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் கடும் பனிப்பொழிவால் தரையெங்கும் பனிப்படலம் போர்த்தி வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
வீட்டின் கூரை, கார் ஆகியவற்றின் மீதும் பனி உறைந்து மூடியுள்ளதால் வெண்மையாகக் காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் பனிக் கட்டியை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர்.