காஷ்மீரில் போலி என்கவுண்டர் நடத்திய 3 ராணுவ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 3 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட நிலையில் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த சிறப்புக் குழுவினரின் விசாரணையில் அவர்கள் தொழிலாளர்கள் என்பது உறுதியானது.
இதனையடுத்து போலி என்கவுண்டர் நடத்தியதாக ராணுவ கேப்டன் புபிந்தர், பிலால் அகமது மற்றும் தபீஸ் அகமது ஆகியோர் மீது காஷ்மீர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.