மகாராஷ்ட்ரா சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாக பி.எம்.சி வங்கி கடன் வழங்கியது. வாராக்கடனால் வங்கிக்கு சுமார் 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வழக்குப் பதிவாகி வங்கி மேலாளர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சஞ்சய் ராவத்தின் மனைவி 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.