மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இன்று கத்தார் புறப்பட்டுச் செல்கிறார்.
முதன்முறையாக அந்த நாட்டுக்குச் செல்லும் அவர், இருதரப்பு உறவுகள் பரஸ்பர நலன்கள் குறித்து பேசுவார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கத்தார் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கொரோனா தொற்றின் போது இந்தியர்களைச் சிறப்பாக கவனித்துக் கொண்டதற்காக அந்நாட்டு அரசுக்கு அமைச்சர் ஜெய்சங்கர், நன்றி தெரிவித்துக் கொள்ள உள்ளார்.