வேளாண் சட்டங்களை எதிர்க்கும் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வரும் டிசம்பர் 31ம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கான கேரள அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே டிசம்பர் 23ம் தேதி பேரவைக் கூட்டத்தைக் கூட்ட கேரள அரசு அனுமதி கோரிய போது அதனை ஆளுநர் நிராகரித்தார்.
ஆயினும் தற்போது ஆளுநர் 31ம் தேதி ஒருநாள் சிறப்புக்கூட்டத்தைக் கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார். விவசாயிகள் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்போவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளளார்.