இந்திய விமானப் படைக்கு பலம் சேர்க்கும் வகையில் மேலும் மூன்று ரபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளன.
பிரான்சில் இருந்து எங்கும் இடையில் நிற்காமல் இந்த மூன்று ரபேல் விமானங்களும் இந்தியாவின் ஜாம்நகருக்கு பறந்து வரும். நடுவானில் எரிபொருளை நிரப்புவதற்கு இந்திய பிரான்ஸ் விமானங்கள் அவற்றுக்கு துணை நிற்கும்.
கடந்த ஜூலை மாதம் முதல் தவணையாக இந்தியாவுக்கு பிரான்ஸ் 5 ரபேல் விமானங்களை வழங்கியது. தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்கள் இரண்டாம் தவணையாக வழங்கப்பட்டன.
மொத்தம் 36 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2021ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்