குடியரசு தின மற்றும் ராணுவ தின அணிவகுப்புகளுக்காக டெல்லி வந்த ராணுவ வீரர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ அணிவகுப்பு ஜனவரி 15ம் தேதி டெல்லியில் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான அணிவகுப்புகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் டெல்லி வந்துள்ளனர்.
அவ்வாறு டெல்லி வந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 150 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், அறிகுறிகள் இல்லாததால், டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.