லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாற்று மதத்தினரை திருமணம் செய்வதற்காக, கட்டாயபடுத்தி மதமாற்றத்துக்கு உட்படுத்தப்படுவது லவ் ஜிகாத் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவதை குற்றமாக கருதும் மசோதாவுக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார்.