துருப்பிடிக்காத உருக்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருட்குவிப்புத் தடுப்பு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொரியா, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து துருப்பிடிக்காத உருக்கு அதிக அளவில் இறக்குமதியாவதைத் தடுக்கப் பொருட்குவிப்புத் தடுப்பு வரி விதிக்கலாம் என வணிகத் தீர்வுக்கான இயக்ககம் பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஐந்தாண்டுகளுக்குப் பொருட்குவிப்புத் தடுப்பு வரி விதிப்பது பற்றி வணிக அமைச்சகமும், நிதியமைச்சகமும் பரிசீலித்து வருகின்றன.
உள்நாட்டில் உருக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் காக்க இந்த வரி விதிப்பு வகை செய்யும் எனக் கருதப்படுகிறது.