மும்பையின் தாராவியில் 9 மாதங்களுக்கு பின்னர், முதல் முறையாக அங்கு இன்று யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவியில் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம் என்பதால் தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மத்திய, மாநில அரசுகள் தாராவியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தினர். இந்நிலையில், கொரோனா பரவிய ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து முதல்முறையாக தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.