திருவனந்தபுரம் மேயராக, 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில், Mudavanmugal வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் பெயரை, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தேர்வு செய்துள்ளது.
இதை மாநிலக் கமிட்டி ஏற்று, இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றால், இந்திய வரலாற்றிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெயரைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.