சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, அது இன்னும் 7 ஆண்டுகள் சிறப்பாக இயங்கும் என தெரிவித்துள்ளது.
சந்திராயன்-2, 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, அதன் ஆர்பிட்டரானது செப்டம்பர் 2ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.
சுமார் 16 மாதங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகள் உள்ளன.
இந்த ஆய்வுக் கருவிகள் மூலம் இதுவரை 8 வகையான ஆய்வுகளை செய்துள்ள சந்திராயன் 2, அதுதொடர்பான விவரங்களை பெங்களூரு அருகே உள்ள தரைநிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த விவரங்களை சரிபார்ப்பிற்குப் பிறகு இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு இந்த விவரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.