மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்த போதும் அடிப்படை ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை சட்டமாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று உறுதியுடன் உள்ள விவசாயிகள் தேவையற்ற சீர்திருத்தங்களை ஏற்க மாட்டோம் எனறு அரசின் சமாதான முயற்சியை நிராகரித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய போது விவசாயத் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களில் விவசாயிகள் எது வேண்டும் எது வேண்டாம் என்பதைத் தெளிவுபடுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.