தரையிலிருந்து வானுக்குப் பாயும் நடுத்தர ரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது. விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியது.
இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்தார்.