ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைக்கிறார்.
அந்த மாநிலத்தில் 8 ஆயிரத்து 341 கோடி ரூபாய் மதிப்பில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் போடும் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரத்து 127 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.