பிரிவினைவாதிகள் முகத்தில் காஷ்மீர் மக்கள் ஓங்கி அறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இடங்களில வெற்றி கிடைத்துள்ளது. காலூன்றவே முடியாது என்று கருதப்பட்ட பாஜகவுக்கு புதிய பாதைகளை இந்தத் தேர்தல் திறந்துவிட்டதாக கருதப்படுகிறது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அறிவித்த திட்டங்கள் தாம் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பாஜக தனியாக 74 இடங்களையும் பல்வேறு காஷ்மீர் அரசியல் கட்சிகள் இணைந்த கட்பந்தன் கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைத்துள்ளன.