இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் பங்குபெற அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும்.டாடா, எல்&டி உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
விண்வெளி பயணத்திற்கான தரைக்கட்டுப்பாட்டு நிலையங்கள், ராக்கெட் ஏவுதளம், செயற்கைக் கோள்களை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டதை தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து நான்கு வெளிநாட்டு நிறுவனங்கள், சென்னை பெங்களூரைச் சேர்ந்தவை என மொத்தம் 22 நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.